பிரதமர் அலுவலகம்
துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
20 FEB 2023 9:33PM by PIB Chennai
உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!
மனித சமூகத்திற்காக மிகப்பெரிய பணியை செய்துவிட்டு நீங்கள் திரும்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரைக் கண்டும் நாடு பெருமை கொள்கிறது. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்னும் கருத்தை நமது கலாச்சாரம் கற்றுத் தந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் இந்த இந்திய மாண்புகளை ஒட்டுமொத்தக் குழுவும் நிரூபித்துள்ளது. மனிதாபிமானம் மற்றும் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் இந்தியா அதற்கு முன்னுரிமை அளிக்கும்.
நண்பர்களே,
இயற்கை பேரிடரின் போது எவ்வளவு விரைவாக உதவுகிறோம் என்பது மிகவும் முக்கியம். நிலநடுக்கத்திற்கு பிறகு எவ்வளவு விரைவாக நீங்கள் துருக்கியை சென்றடைந்தீர்கள் என்பது ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 10 நாட்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நீங்கள் அங்கு மேற்கொண்ட பணிகள் எழுச்சியூட்டுகிறது. தனது தேவைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட நபர், தன்னிறைவானவர் என்றும், பிறரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் மிக்கவர் தன்னலமில்லாதவர் என்றும் அழைக்கப்படுகிறார். இது தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் நாடுகளுக்கும் பொருந்தும். கடந்த சில ஆண்டுகளில் தன்னிறைவுடன், தன்னலமற்ற அடையாளத்தையும் இந்தியா வலுப்படுத்தி உள்ளது.
நண்பர்களே,
மனிதாபிமானத்தில் இந்தியாவின் அக்கறையையும், பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உடனடியாக உதவுவதில் நமது உறுதிபாட்டையும் ஆபரேஷன் தோஸ்த் பிரதிபலிக்கிறது. உலகில் பேரிடர்கள் ஏற்படும்போது முதலில் உதவ இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. இதர நாடுகள், இந்திய படை வீரர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. பேரிடர் காலத்தில் நமது மீட்பு மற்றும் நிவாரண திறனை அதிகரிக்க வேண்டும். உலகிலேயே மிகச்சிறந்த மீட்பு மற்றும் நிவாரணக் குழு என்ற நமது அடையாளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வணங்குகிறேன். நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 1900873)
SRI/RB/KRS
(Release ID: 1901010)
Visitor Counter : 148
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam