ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ரயில்வே சங்கமும், ரயில்வே பாதுகாப்பு படையும் நடந்தும் 18-வது உலக பாதுகாப்பு மாநாடு ஜெய்ப்பூரில் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடக்கம்

Posted On: 20 FEB 2023 11:16AM by PIB Chennai

சர்வதேச ரயில்வே சங்கமும் ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் 23 வரை ஜெய்ப்பூரில் 18-வது உலக பாதுகாப்பு மாநாட்டை நடத்தவுள்ளன.

சர்வதேச ரயில்வே சங்கம் என்பது ரயில்வே துறையை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, உலகம் முழுவதும் ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கிறுது. ரயில்வே பாதுகாப்பு படை, இந்தியாவில் உள்ள ரயில்வே பாதுகாப்புத் துறையின் முக்கிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க முகமையாக செயல்படுகிறது.

‘ரயில்வே பாதுகாப்பு உத்தி: எதிர்காலத்திற்கான பதில்களும் தொலைநோக்குப் பார்வையும்' என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.  உலகம் முழுவதிலும் உள்ள ரயில்வே நிறுவனங்களின் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள், சர்வதேச ரயில்வே சங்கத்தின் அதிகாரிகள், இணை நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்திய ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை, இந்திய காவல்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வார்கள்.

ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் சந்தர், சர்வதேச ரயில்வே சங்க பாதுகாப்பு தளத்தின் தலைவராக ஜூலை 2022 முதல் ஜூலை 2024 வரை பொறுப்பு வகிப்பது இந்தியாவிற்கு மேலும் பெருமை அளிக்கிறது. முன்னதாக, 2006 மற்றும் 2015 இல் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை இத்தகைய மாநாட்டை புதுதில்லியில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

*** 

SRI/RB/PK


(Release ID: 1900710) Visitor Counter : 217