விவசாயத்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் முதலாவதுவேளாண் பணிக்குழுக் கூட்டம் இந்தூரில் நிறைவடைந்தது

Posted On: 15 FEB 2023 5:06PM by PIB Chennai

இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் இந்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முதலாவது வேளாண் பணிக்குழுக் கூட்டம் இன்று (15.02.2023) நிறைவடைந்தது. கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, பருவநிலை அணுகுமுறையுடன் நீடித்த வேளாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய வேளாண்மை மதிப்புச் சங்கிலி மற்றும் உணவு நடைமுறைகள், வேளாண் துறையில் மாற்றத்திற்கான டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய நான்கு கருப்பொருள்களின் மீதான விவாதங்களுடன் இன்றைய நிறைவுநாள் தொழில்நுட்ப அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு அமர்வின் போதும், திறந்த முறையிலான விவாதங்கள் நடைபெற்றன. பிரதிநிதிகள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை இணைச்செயலாளர் டாக்டர் ஸ்மிதா சிரோகி, அமர்வுகளின் போது விவாதிக்கப்பட்ட முக்கியமான கருத்துக்களை விளக்கினார்.

நிறைவுரையாற்றிய வேளாண் துறை செயலாளர் திரு மனோஜ் அகுஜா, வேளாண் ஆய்வுகள் மேம்பாட்டுப் பணிகளில் ஜி-20 உறுப்புநாடுகள் இடையே கூடுதல் ஒருங்கிணைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899499

***

AP/PLM/UM/GK(Release ID: 1899625) Visitor Counter : 114