நிதி அமைச்சகம்
2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
15 FEB 2023 12:57PM by PIB Chennai
2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும்.
வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வருமான வரி சட்டதிருத்தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கை வெளியிடப்பட்ட படிவங்கள் வருமான வரித்துறையின் www.incometaxindia.gov.in. என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899362
***
AP/SMB/PK/PK
(रिलीज़ आईडी: 1899435)
आगंतुक पटल : 411