பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மகளிர் சக்தியை கொண்டாடும் விதமாக கடற்படை சார்பில் அனைத்து மகளிர் கார் பேரணி

Posted On: 13 FEB 2023 10:21AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 76-வது சுதந்திர தின உரையில், அமுதகால தொலைநோக்குப் பார்வையை எட்டுவது, நாட்டின் மகளிர் சக்தி முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     அதை கருத்தில் கொண்டு கடற்படை நல சங்கத்துடன் இணைந்து கடற்படை அனைத்து மகளிர் மோட்டார் வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெண் சக்தியை தடுக்க முடியாது என்ற கருப்பொருளில் உயர பறப்போம் என்ற தத்துவத்துடன் புதுதில்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்த கார் பேரணி நாளை (14.02.2023) தொடங்குகிறது.

     பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பேரணி, ஜெய்ப்பூர், பிகானீர், ஜெய்சல்மர், லோங்கோவாலா, ஜோத்பூர், உதய்பூர் ஆகிய நகரங்களுக்குச் சென்று மீண்டும் தில்லி திரும்புகிறது.  இந்த கார் பேரணி மொத்தம் 2,300 கிலோமீட்டர் பயணம் கொண்டதாக அமையும்.

     75-வது விடுதலைப்பெருவிழாவை கொண்டாடுதல், கடற்படையில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பை வெளிப்படுத்துதல், கடற்படையில் இணைய பெண்களை ஊக்குவித்தல், லோங்கோவாலா போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்துதல், முன்னாள் கடற்படை வீர்ர்களுடன் கலந்துரையாடுதல், கடற்படை நல சங்க தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கார் பேரணி நடைபெறவுள்ளது.

     கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிக்குமார் இந்த கார் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898621

 ***

PKV/PLM/UM/RR(Release ID: 1898687) Visitor Counter : 120