சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் கொள்கை
प्रविष्टि तिथि:
09 FEB 2023 4:47PM by PIB Chennai
இந்திய ஹஜ் யாத்திரிகர்கள் இந்தியாவிலும், சவுதி அரேபியாவிலும் பாதுகாப்பாக பயணிக்கவும், தங்குவதற்கும், நலமுடன் இருப்பதற்கும் விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகங்கள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள், இந்திய ஹஜ் கமிட்டி, வெளியுறவு அமைச்சகம், ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரகம் உள்ளிட்டவைகளுடன் ஒருங்கிணைந்து தேவையான விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஹஜ் மேலாண்மையுடன் பல்வேறு உரையாடல்கள் வாயிலாக இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே சிறுபான்மைத் துறை அமைச்சகம் செய்துள்ளது.
இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் இன்று தெரிவித்தார்.
-----
AP/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1897761)
आगंतुक पटल : 195