எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

‘மிகச் சிறந்த ஏடிடி விருதினை’ என்டிபிசி தொடர்ந்து 6-வது ஆண்டாக பெறுகிறது

Posted On: 08 FEB 2023 1:58PM by PIB Chennai

நாட்டின்  மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் உற்பத்திக் கழகம் தேசிய அனல்மின் உற்பத்தி கழகம் (என்டிபிசி),  அமெரிக்காவில் உள்ள திறன் மேம்பாட்டுக்கான சங்கத்தால் (ஏடிடி) மிகச் சிறந்த ஏடிடி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

திறன் வளர்ச்சிப் பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டதற்காக என்டிபிசி நிறுவனம் 6-வது முறையாக இந்த விருதினை  பெற்றுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களில் ஊழியர்களை ஈடுபடுத்துவது  என்டிபிசி நிறுவனத்தின் கலாச்சாரமாக  எப்போதும் இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமகால மனித ஆற்றல் நடைமுறைகள் பராமரிப்புக்கு சான்றாக இந்த விருது அமைந்துள்ளது.

திறன் வளர்ச்சி மூலம், திறமைகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களை ஏடிடி விருதுகள் அங்கீகரிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் பெரிய தனியார், அரசு, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள திறன் வளர்ச்சிக்கான சங்கம், உலகிலேயே மிகப்பெரிய சங்கமாகும்.  கற்பித்தல் மற்றும் வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக  பலராலும் விரும்பபடுகின்ற  விருதாக ஏடிடி சிறப்பு விருது உள்ளது.

***

(Release ID: 1897279)



(Release ID: 1897345) Visitor Counter : 138