இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம், தீம் பாடல், மற்றும் சீருடையை (ஜெர்சி) மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநரோடு இணைந்து தொடங்கி வைத்தார்

Posted On: 04 FEB 2023 3:37PM by PIB Chennai

3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம், கருப்பொருள் பாடல், மற்றும் சீருடையை , மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹாவோடு இணைந்து ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், திரு அனுராக் சிங் தாக்கூர் பேசும் போது,  கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் ‘கேலோ இந்தியா இயக்கத்தின் ’ ஒரு பகுதியாகும். இது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிந்தனைகளில் ஒன்றான இளைஞர்களை விளையாட்டுகளுக்கு ஊக்குவித்து, உலக அரங்கில் இந்தியாவை விளையாட்டு சக்தியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகின்றது என்றார். கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமரின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், கேலோ இந்தியா இயக்கம், ஃபிட் இந்தியா பிரச்சாரம் மூலம் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது என்றார்.

மேலும் இந்தியாவில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பெரிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக வீரர்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படும் விதமாக வெற்றிகளைக் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது  என்றார்.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்கும் இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் 1500 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டுகளுக்கு ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலாவை மேம்படுத்துவார்கள். அமைதியை மேம்படுத்தும் நல்லெண்ண தூதுவர்களாக மாறுவார்கள் என்றும் திரு தாக்கூர் கூறினார்.

இந்த விளையாட்டுகளை இங்கு தொடங்குவதன் மூலம், இளைஞர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் வகையில் சிறந்த வசதிகளை வழங்க முடியும் என்றும் திரு தாக்கூர் தெரிவித்தார்.

 

-----



(Release ID: 1896335) Visitor Counter : 133