இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம் மற்றும் சீருடை (ஜெர்சி) அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்கிறார்
Posted On:
03 FEB 2023 4:51PM by PIB Chennai
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம் மற்றும் சீருடை (ஜெர்சி) அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்கிறார், கேலோ இந்தியா விளையாட்டுகள் வரும் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஜம்மு கஷ்மீரின் குல்பர்கில் நடைபெறுகிறது. நாடுமுழுவதும் இருந்து 1,500 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் 9 பிரிவுகளில் விளையாடுகின்றனர். இதனை முன்னிட்டு, 3 ஆவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டின் சின்னம், சீருடை (ஜெர்சி) அறிமுக விழா நாளை ஜம்முவில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
இதில் துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் ஆதரவுடன் ஜம்மு கஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் குளிர்கால விளையாட்டு சங்கம் சார்பில் 3 ஆவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு நடத்தப்படுகிறது.
***
AP/ES/PK/RJ
(Release ID: 1896117)
Visitor Counter : 149