ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே வருவாய் பயணிகள் பிரிவில் 73 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 02 FEB 2023 2:58PM by PIB Chennai

2022 ஏப்ரல் முதல் ஜனவரி 2023 வரை பயணிகள் பிரிவில் ரயில்வேயின் மொத்த தோராயமான வருவாய் ரூ. 54733 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு  இதே காலத்தில் வருவாய் ரூ.31,634 கோடியாக இருந்தது.

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல்  2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 6590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6181 லட்சமாக இருந்தது. இது 7% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலக்கட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து ரூ.42,945 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.29,079 கோடியாக இருந்தது, இது 48% அதிகரிப்பைக் காட்டுகிறது.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில், பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 45,180 லட்சமாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19,785 லட்சமாக இருந்தது, இது 128% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2022 ஏப்ரல் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.11788 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,555 கோடியாக இருந்தது, இது 361% அதிகரிப்பைக் காட்டுகிறது.

***

(Release ID: 1895712)
PKV/AG/RR



(Release ID: 1895731) Visitor Counter : 124