இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

2022-23 நிதியாண்டை விட, 11 சதவீதம் அதிகமாக 2023- 24-ம் நிதியாண்டில் 3397.32 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது

Posted On: 02 FEB 2023 2:49PM by PIB Chennai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு 2004-05ம் நிதியாண்டில் பட்ஜெட்டில் 460 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆண்டுதோறும் பல மடங்கு அதிகரித்து வரும் 2023-24ம் நிதியாண்டில் 3397.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-23 நிதியாண்டை விட, 11 சதவீதம் அதிகமாக 2023- 24-ம் நிதியாண்டில் 3397.32 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீடாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது. 2011- 12ம் நிதியாண்டை விட, 3 மடங்கு அதிகமாகவும், 2014-15ம் நிதியாண்டை விட, இரண்டு மடங்கு அதிகமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறைக்கு 2462.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2254 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இளைஞர் நலத்துறைக்கு  934.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 808.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (ரூ. 1000 கோடி,) இந்திய விளையாட்டு ஆணையம் (ரூ.785 .52 கோடி) நேரு யுவகேந்திரா சங்கதன் (ரூ. 401.49 கோடி) தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (ரூ. 325 கோடி), தேசிய பணித்திட்டம்  (ரூ. 325  கோடி).

2023-24-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு முன்னுரிமை அளித்ததற்காக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1895711 

----------

AP/IR/RS/RR



(Release ID: 1895725) Visitor Counter : 276