நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எவரும் பின்தங்கிவிடாமல் 2014ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சாதனைகள்

प्रविष्टि तिथि: 01 FEB 2023 1:28PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில்  மத்திய பட்ஜெட் 2023- 24ஐ இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கடந்த 2014ம் ஆண்டிலிருந்து அனைத்து குடிமக்களும் கண்ணியத்துடன் சிறந்த வாழ்வாதாரத்தை பெறுவதை அரசு உறுதி செய்துள்ளதாகவும், தலா வருமானம் ரூ. 1.97 லட்சம் என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளதாகவும் கூறினார். இந்த ஒன்பது ஆண்டுகளில் உலகில்டி 10-ம் இடத்தில் இருந்த நமது பொருளாதாரம் 5-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்தார். 

பல்வேறு திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம், கிடைத்த பயன்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.

  • தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ், 11.7 கோடி வீடுகளில் கழிப்பறைகள்
  • இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ், 9.6 கோடி எல்பிஜி இணைப்புகள்
  • 102 கோடி பேருக்கு 220 கோடி கொவிட் தடுப்பூசிகள்
  • 47.8 கோடி பிரதமர் மக்கள் வங்கி கணக்குகள்
  • பிரதமர் விவசாயிகள் வருவாய் திட்டத்தின் கீழ், 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2லட்சம் கோடி ரூபாய் ரொக்க பரிமாற்றம்.

***

(Release ID 1895307)

IR/RS/RR


(रिलीज़ आईडी: 1895692) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam