நிதி அமைச்சகம்
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி மாற்றியமைக்கப்படும்
प्रविष्टि तिथि:
01 FEB 2023 1:23PM by PIB Chennai
அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்னும் அரசின் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சப்தரிஷி என்னும் ஏழு முன்னுரிமைகளை இந்த பட்ஜெட் அடிப்படையாக கொண்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆசிரியர்கள் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க, புதுமையான கற்பித்தல் கலை, பாடத்திட்ட பரிவர்த்தனை, தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றுடன் அது மேம்படுத்தப்படவுள்ளது. இந்த நோக்கத்துக்காக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல் திறன் மிக்க நிறுவனங்களாக உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிறார்கள் மற்றும் பதின் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். பல்வேறு பிராந்திய மொழி சார்ந்த தரமான நூல்கள் இதில் கிடைக்கும். பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவில் நூலகங்களும் ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் கற்றல் முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்க தேசிய நூல் அறக்கட்டளை, குழந்தைகள் நூல் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
***
(Release ID: 1895305)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1895674)
आगंतुक पटल : 261