நிதி அமைச்சகம்
பொது சுகாதாரக் கட்டமைப்பு என்பது ‘பொது சுகாதார முறையின் நரம்பு மண்டலம்’: பொருளாதார ஆய்வறிக்கை 2023
Posted On:
31 JAN 2023 1:34PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2022-23, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பும் பொது சுகாதார கட்டமைப்பும் 'பொது சுகாதார முறையின் நரம்பு மண்டலம்' என்று குறிப்பிட்டுள்ளது, இது பொது சுகாதார சேவையை தொலைதூரத்திற்கும் அளிப்பதற்கு அடிப்படை ஆதரவு அமைப்பை உருவாக்குகிறது, சுகாதாரக் கட்டமைப்பு ஒரு நாட்டின் சுகாதார விநியோக ஏற்பாடுகள் மற்றும் நலன்தரும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கிய குறியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு வழிவகுத்த சமீபத்திய சுகாதாரத் துறை சீர்திருத்தங்களை பொருளாதார ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. கிராமப் பகுதிகளில் சமுதாய சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை இது எடுத்துகாட்டுகிறது. ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் 2022 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மையங்கள் விரிவான முதன்மை சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894911
***
AP/GK
(Release ID: 1895139)
Visitor Counter : 297