நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சுகாதாரம் - அர்ப்பணிக்கப்பட்ட கொவிட் உள்கட்டமைப்பு குறித்த ஒரு விரிவான தகவல்

தொற்று பாதிப்பைக் குறைக்க, பிரத்யேக கொவிட்-19 சுகாதார வசதிகளின் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தபட்டன.

ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனை 4,852 மெட்ரிக் டன்களாக அதிகரிக்க, நாட்டில் 4,135 PSA ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து சுகாதார மையங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நடைமுறைகள்

மாநிலங்களில் நோயாளிகளின் பராமரிப்புக்காக போதிய அளவு மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை அரசு உறுதி செய்கிறது; நான்கு லட்சத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன

Posted On: 31 JAN 2023 1:30PM by PIB Chennai

கொவிட்-19 வைரஸ் நாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில்  சவாலான நிலை ஏற்பட்ட போது, முந்தைய பொருளாதார ஆய்வறிக்கைகளில்  விவாதிக்கப்பட்டபடி, அது தொடர்பான கருத்துக்கள், நேரடித் தாக்கத்தின் நிகழ்நேர கண்காணிப்பு, மீள்தன்மையுடன் கூடிய செயல்பாடுகள் மற்றும் பாதிப்பைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்  ஆகியவற்றின் அடிப்படையில் விரைவான  அணுகுமுறையுடன் அதன் பாதிப்புகள் சமாளிக்கப்பட்டது. தொற்றுப் பரவல் குறித்து அறிவிக்கப்பட்டதில் இருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியை சமநிலைப்படுத்தவும், அதிகரித்து வரும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிக்கவும் அரசு பல்வேறு நிதி மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டது. நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதார வல்லுநர்களின் மேம்பட்ட பயிற்சி மற்றும் மக்களிடையே தடுப்பூசி இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும் என்று 2022-23-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிப்பதில் அரசின்  கவனத்தை எடுத்துக்காட்டுவதுடன், (அ) அடிப்படை சுகாதார நிலையங்கள், சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைப்பதற்கான முதலீடுகளை செய்வது  (ஆ) அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை தொகுதிகளை ஏற்படுத்துவது; (இ) தொற்றுப் பரவலை சமாளிப்பதற்கு  அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், தொகுதிகள் மற்றும் பொது சுகாதாரப் பிரிவுகள் மூலம் ஆய்வக வலையமைப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துதல்; போன்ற  சுகாதாரக் கட்டமைப்பிற்கான செலவினங்களை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிற்கு எதிராக மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கோ-வின் செயலி மூலம் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொலை மருத்துவ  முறையான இ-சஞ்சீவனி போன்ற செயல்பாடுகள் மூலம் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்றடைய இது துணைபுரிகிறது. தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தபோதிலும், அனைத்து நிலைகளிலும் சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக வழிநடத்த உதவியது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த சில மாதங்களில், கொவிட்-19  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்றும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவாக உள்ளது என்றும், நாள்தோறும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாக (2022-ம் ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி நிலவரப்படி) பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

பிரத்யேக கொவிட் உள்கட்டமைப்பு:

கொவிட் தொற்று பாதிப்பு அல்லாத நோயாளிகளுக்கு, தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும், கொவிட் அல்லாத அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் நாட்டில் பிரத்யேகமாக மூன்று அடுக்கு கொண்ட கொவிட்-19 சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. (i) லேசான பாதிப்பு அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக கொவிட் பராமரிப்பு மையம்; (ii) மிதமான பாதிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொவிட் சுகாதார மையம், மற்றும் (iii) கடுமையாக பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய படுக்கை வசதிகள் கொண்ட பிரத்யேக கொவிட் மருத்துவமனை ஆகியவை இந்த மூன்று அடுக்கு சுகாதார வசதிக்கான ஏற்பாடுகளில் அடங்கும். (ii) மிதமான பாதிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் கொண்ட பிரத்யேக கோவிட் சுகாதார மையம், மற்றும் (iii) கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய படுக்கை வசதிகள் கொண்ட பிரத்யேக கோவிட் மருத்துவமனை. இது தவிர, மாநில தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம் [ESIC], பாதுகாப்பு, இரயில்வே, மத்திய ஆயுதக் காவல் படைகள், எஃகு அமைச்சகம் போன்றவற்றின் கீழ் உள்ள மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக, பல்வேறு மாநிலங்களில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) சிகிச்சைக்கான திறன்களை விரைவாக அதிகரிக்க ஏதுவாக பெரிய அளவிலான கள மருத்துவமனைகளும் பயன்படுத்தப்பட்டன.

கொவிட் தொற்று பாதிப்புகளின் போது ஆக்ஸிஜன் உற்பத்திக்கான கட்டமைப்பு  வலுப்படுத்தப்பட்டது.

  • காற்றழுத்த முறையில் ஆக்சிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் முறை  (PSA) ஆக்சிஜனை  உற்பத்தி செய்யும் தாவரங்கள் உருவாக்கும் தாவரங்கள்:

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளின் முக்கியத்துவம் கருதி காற்றழுத்த முறையில் ஆக்சிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் முறையை [PSA]  விரிவுபடுத்தும் வகையில், அத்தகைய வசதிகள் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் தங்கள் தேவைகளுக்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் தன்னிறைவு அடையச் செய்வதன் மூலம் நாடு முழுவதிலும் மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தில் உள்ள சுமையைக் குறைக்கிறது என்று பொருளாதார ஆய்வு கூறுகிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொது சுகாதார வசதிகளில் பி எம் - கேர் நிதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு காற்றழுத்த முறையில் ஆக்சிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் முறையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலை நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை 4,852 MT ஆக அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதிலும் 4,135 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) 2021-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி  அன்று அனைத்து சுகாதார மையங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கான ஆலைகளை அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்கி, அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

 

 

  • ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: மாநிலங்களில் நோயாளிகளின் பராமரிப்புக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை அரசு உறுதி செய்துள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு 4,02,517 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன; 2020-ம்  ஆண்டில், மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தின் (சிஎம்எஸ்எஸ்) மூலம் 1.0 லட்சம் சிலிண்டர்கள்; 2021-ம் ஆண்டில் 1.3 லட்சம் சிலிண்டர்கள்; 2021-ம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் [DRDO] மூலம் 1.5 லட்சம் சிலிண்டர்கள் மற்றும் வெளிநாட்டு உதவியுடன் 23,000. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வெளிப்படையான மற்றும் பங்கேற்பு அடிப்படையில் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

 

  • மேலும், UNICEF-ADB (ஆசிய வளர்ச்சி வங்கி) வங்கியின் நிதி ஆதரவுடன் மாநிலங்களுக்கு கூடுதலாக 14,340 D-வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளது.

 

  • ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: கொவிட் கட்டுப்பாடு மேலாண்மைக்காக மத்திய அரசு மொத்தம் 1,13,186 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கொள்முதல் செய்துள்ளது. அதாவது, கிராமப்புறங்களில் பயன்படுத்துவதற்காக எண்ணெய்  மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் [ONGC] மூலம் பி எம் கேர்ஸ்  நிதியின் கீழ் 99,186; மற்றும் 14,000 அவசரகால  கோவிட் பயன்பாட்டிற்கான தொகுப்பு (ECRP) திட்டத்தின் கீழ். உள்நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இந்த செறிவூட்டிகள் அனைத்தும் ஏற்கனவே மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆக்ஸிஜன் பராமரிப்பு [OC-MIS]  (OxyCare MIS என்ற இணையதளம்) வாயிலாக மாவட்ட அளவில் பெறப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்யவும், ஆக்சிஜன் செறிவூட்டிகாளைப் பெறுபவர்களின் விவரங்களுடன் மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை உடனடியாக வழங்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

(Release ID: 1894908)

AP/Visu/KRS(Release ID: 1895060) Visitor Counter : 92