இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
என் சகோதரரின் தூண்டுதல் காரணமாகவே, நான் துப்பாக்கி சுடுதலைக் கற்றுக்கொண்டேன்: எல்லா நேரத்திலும் எனக்கு உதவியாக இருப்பார்: ஷிவா நர்வால்
Posted On:
29 JAN 2023 2:45PM by PIB Chennai
இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரரும், பாரா –ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரருமான மனிஷ் நர்வால், கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோ பாரா – ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதுடன், புதிய சாதனையும் படைத்தார்.
இதன்மூலம் கேலோ ரத்னா விருது பெற்றது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான வீரர்கள் துப்பாக்கி சுடுதலில் சாதிப்பதற்கும், இதனைத் தங்களது சாதனைக்கான துறையாகத் தேர்வு செய்வதற்கும் தூண்டுகோலாகத் திகழ்கிறார்.
ஆனால் 2021ம் ஆண்டிற்கு முன்பு இவர் இந்த சாதனையைப் படைப்பதற்கும், இந்த விளையாட்டில் கால்பதிப்பதற்கும், தூண்டுகோலாக இருந்தவர், அவரது தம்பி ஷிவா நர்வால்.
ஷிவா, 2020ம் மற்றும 2021ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில், தங்கம் வென்றவர் ஆவார். 17 வயதான இவர், கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், பாரீஸ் ஒலிம்பிக் கோட்டா போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதுடன், 8வது இடத்தையும் பிடித்தார்.
உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் பெறத் தவறிய இவர், ஆசியன் ஏர்கன் சாம்பியன் போட்டியில் ஆடவர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
இந்தியாவைப் பொருத்தவரை, தன்னை சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக நிலைநிறுத்திக்கொண்டுள்ள மனீஷ்ஷிற்கு, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில், தங்கம் வெல்வது மட்டுமல்ல, ஹாட்-ரிக் தங்கத்தைத் தக்க வைக்க வேண்டும் என்பதே இலக்கு.
2022ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் பங்கேற்க என்னைத் தேர்வு செய்மது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் அந்த தொடரில் எனது விளையாட்டு சிறப்பாக இருந்ததைப்போல, இம்முறையும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். அதேநேரத்தில் ஹரியானாவிற்கு மீண்டும் ஒரு தக்கப்பதக்கத்தை வென்று தருவேன் என்று நம்புகிறேன் என்கிறார்.
என்னுடைய மூத்த சகோதரி மற்றும் சகோதரன் என இருவருமே துப்பாக்கிச்சுடுதலில் வல்லவர்கள், அவர்களைப் பார்த்தே இந்த துறையைத் தேர்வு செய்ததுடன், ஏர் பிஸ்டல் பிரிவில் தன் திறமையை வெளிப்படுத்தி வருவதாக ஷிவா தெரிவித்துள்ளார்.
மனிஷா எப்போதும் எனக்கு உதவியதாகவும், துப்பாக்கி சுடுதலில் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் பக்கபலமாகவும் இருக்கிறார் என்கிறார்.
அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில், 588 புள்ளிகளுடன் ஷிவா முன்னணி வகித்ததுடன், தனது சக இணையான சாம்ராட் ராணவை 2ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளினார். இந்தப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றதுடன், அவரது சகோதரி ஷிகா நர்வால் சிறுமிகளுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெங்கலப்பதக்கம் வென்றார்.
*****
ES / DL
(Release ID: 1894482)
Visitor Counter : 191