இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள பிரபல விளையாட்டு வீரர்கள்

Posted On: 28 JAN 2023 4:49PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்டத்தின்  மேம்பாட்டு விளையாட்டு வீரர்கள் களத்தில் பங்கேற்பார்கள். ஏற்கனவே சர்வதேச சாதனையாளர்களாக இருக்கும் விளையாட்டு வீரர்கள், அடிமட்ட அளவிலான விளையாட்டு வீரர்களை முன்னோக்கி உயர்த்தி, கடுமையான போட்டியை வழங்குவதால், இது விளையாட்டுகளின் அளவை உயர்த்துகிறது.

மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூர், உஜ்ஜைனி, குவாலியர், ஜபல்பூர், மாண்ட்லா, கார்கோன் (மகேஷ்வர்), பாலகாட் ,புதுதில்லி ஆகிய 8 நகரங்களில் நடைபெறும் போட்டிகளில்  மொத்தம் 6000 தடகள வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  மொத்தம் 27 பிரிவுகளைக் கொண்டிருக்கும்; விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக நீர் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்  கீழ் 2014 இல் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்டம், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான ஒரு தொழில்முறை அமைப்பாகும். இந்தத் திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உலகளாவிய பயிற்சியாளர்களிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி ஆதரவை வழங்குகிறது, சர்வதேச பயிற்சி அமர்வுகள், விசா வசதிக்கான ஆதரவு மற்றும் எதிராளியின் செயல்திறனைக் கண்காணிக்க உயர்மட்ட ஆராய்ச்சி ஆதரவை வழங்குகிறது.

ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கம் வெல்வதற்கு விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 2020 ஆம் ஆண்டில், 10 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு 2028 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் வெற்றியாளர்களை உருவாக்க இது தொடங்கப்பட்டது.

*****

 

PKV / DL



(Release ID: 1894333) Visitor Counter : 145