விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு இன்று நைஜீரியாவின் தலைநகரான அபுஜா சென்றடைந்தது

Posted On: 26 JAN 2023 2:47PM by PIB Chennai

தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் சிறுதானியங்களுக்கான ஆதரவை அடுத்த உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு இன்று நைஜீரியாவின் தலைநகரான அபுஜா சென்றடைந்தது. 

2023 ஜனவரி 26 முதல் ஜனவரி 29 வரை நான்கு நாள் சிறுதானியங்களுக்கான ஆதரவு  பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், திரு லிக்கி, இந்தியா சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023 தொடங்குவதை அடுத்துமத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய தூதரகங்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 54 நாடுகளில் நைஜீரியா 2வது பணக்கார நாடாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. மேலும் இது எகிப்து, தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா, மொராக்கோ, எத்தியோப்பியா, கென்யா, அங்கோலா, கானா,சூடான்  போன்ற இந்தியாவின் மற்ற முக்கிய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து சிறுதானியங்களுக்கான தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாதிரியாக மாறக்கூடும்.   "உணவுப் பாதுகாப்புப் பற்றாக்குறையை" நிவர்த்தி செய்ய, இது ஆப்பிரிக்கக் கண்டம் எதிர்கொள்ளும் மிகவும் வலிமையான சவால்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் முன்னுரிமைகள், வளர்ந்து வரும் உலகளாவிய உணவு சந்தைகளில் உள்ள ஒத்த கருத்துடைய விவசாயத்தில் ஒத்துழைக்க ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், இந்திய அரசு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான முன்மொழிவுக்கு நிதியுதவி அளித்தது, இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசு இதனைக்  கொண்டாடுவதில் முன்னணியில் இருப்பதற்கு இந்தப் பிரகடனம் உறுதுணையாக இருந்தது. திரு நரேந்திர மோடி, இந்தியாவை ‘சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையமாக’ நிலைநிறுத்துவதுடன், சிறுதானியங்கள் ஆண்டை  ‘மக்கள் இயக்கமாக’ மாற்றுவதற்கான தனது தொலைநோக்கையும் பகிர்ந்து கொண்டார்.

140 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் 2023 ஆம் ஆண்டில் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும். சமைத்த சிறுதானியங்கள் உணவு கண்காட்சிகள்/போட்டிகள் இந்திய புலம்பெயர்ந்தோரின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும். குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிறுதானியங்கள் உணவுகள் வழங்கப்படும் என்பதை வலியுறுத்தலாம்.

*****

 

AP / PKV / DL



(Release ID: 1893939) Visitor Counter : 153