உள்துறை அமைச்சகம்

தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்

Posted On: 25 JAN 2023 11:03AM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, உள்நாட்டு பாதுகாப்புப் படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கும், சிறப்பாகவும் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றியவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

2023 குடியரசு தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 47 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுள் இருவருக்கு வீரதீர செயல் புரிந்ததற்கான விருது வழங்கப்படுகிறது.

7 பேருக்கு சிறப்பு செயல்களுக்கான விருதுகளும், 38 பேருக்கு போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் தீயணைப்புத் துறை பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

இது தவிர குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 55 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் ஒருவருக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கப்படுகிறது.

ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கான குடியரசுத் தலைவரின் பதக்கமும் சிறந்த சேவைக்கான பதக்கமும் முறையே 9 மற்றும் 45 பேருக்கு வழங்கப்படுகிறது.

***

AP/RB/KRS



(Release ID: 1893647) Visitor Counter : 175