குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

74- வது குடியரசு தினத்தையொட்டி நாளை நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 24 JAN 2023 5:09PM by PIB Chennai

நாட்டின் 74- வது குடியரசு தினத்தையொட்டி நாளை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.

 

இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும்  இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது.  அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் பிராந்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும்

***

(Release ID: 1893303)

AP/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1893339) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi