பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவில் கோடேகால் பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் யாத்கிர் பல கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு
அடிக்கல் நாட்டினார்

நாராயண்பூர் இடது கரை கால்வாய் விரிவாக்கத்தின் கீழ் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் தொடக்கம் பதாதாலிருந்து மரதாகி எஸ் அந்தோலா என்எச் 150சி பசுமை நெடுஞ்சாலையில் 65.5 கிலோ மீட்டர் அளவிலான

6 வழிச்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் “இந்த விடுதலையின் அமிர்த கால பெருவிழாவில்
விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) உருவாக்க வேண்டும்” “நம் நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக நாடே வளர்ச்சியடையாது”

“கல்வி, சுகாதாரம் மற்றும் இணைப்பு வசதிகளை பொறுத்தமட்டில் மாவட்ட அளவிலான முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் 10 மாவட்டங்களில் யாத்கிர் முன்னிலை”

“ஊக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு அணுகுமுறை மூலம் இரட்டை எஞ்சின் அரசு இயங்குகிறது”
“பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் யாத்கிரில் உள்ள சுமார் 1.25 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ.250 கோடி நிதி உதவி” “நமது நாட்டின் விவசாயக் கொள்கையில் சிறு விவசாயிகளுக்கே முன்ன

Posted On: 19 JAN 2023 2:20PM by PIB Chennai

பிரதமர் கர்நாடகாவின் கோடேகால், யாத்கிர் போன்ற பகுதிகளில் இன்று (19.01.2023) பல்வேறு திட்டங்களுக்கு குறிப்பாக நீர்ப்பாசனம், குடிநீர் மற்றம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் யாத்கிர் கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம், பதாதாலிருந்து மரதாகி எஸ் அந்தோலா என்எச் 150சி பசுமை நெடுஞ்சாலையில் 65.5 கிலோ மீட்டர் அளவிலான 6 வழிச்சாலைத் திட்டம், நாராயண்பூர் இடது கரை கால்வாய் விரிவாக்கத்தின் கீழ் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகா மாநில மக்களின் அன்பையும், ஆதரவையும் முன்னிலைப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மிகப் பெரிய
வலிமைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்றார். யாத்கிரின், பாரம்பரிய வரலாற்றைப் பற்றி பேசிய பிரதமர், பழம்பெரும்
ராட்டிஹல்லி கோட்டை, நமது முன்னோர்களின் ஆற்றல்கள் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னமாக திகழ்கிறது என்றார். மேலும், தலைசிறந்த மகாராஜா வேங்கடப்ப நாயக்கின் சுவராஜ் மற்றும் நல்லாட்சி குறித்த கருத்தாக்கங்கள், நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றது. இந்த உயர்ந்த பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கிறோம் என்றார்.
இன்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் குறிப்பாக சாலை மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவு பெற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தப் பகுதி மக்கள் மிகப் பெரிய
அளவில் பயனடைவர் என்றார். சூரத் – சென்னை சரக்குப் போக்குவரத்து வழித்தடத் திட்டத்தில் கர்நாடக மாநில பகுதிகளும்,
இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் அங்கு மக்களின் வாழ்க்கை முறை எளிதாக்கப்பட்டு, யாத்கிர், ரெய்ச்சூர் மற்றும் கலபுர்கி போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேன்மை பெறும். கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக பிரதமர் அம்மாநில அரசைப் பாராட்டியுள்ளார்.
அடுத்து வரும் 25 ஆண்டுகால கட்டமும் நமக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் விடுதலையின் அமிர்தகாலப் பெருவிழாவாகும்
என்றார். இந்த விடுதலையின் அமிர்த கால பெருவிழாவில் விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) உருவாக்க வேண்டும். இது சாத்தியமாவதற்கு ஒவ்வொரு தனி மனிதனும், குடும்பமும், மாநிலமும், இந்த இயக்கத்தோடு இணைந்து செயலாற்ற வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் வாழ்வில், முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும். அதே போல, நல்ல மகசூல் மற்றும் சிறந்த தொழிற்சாலை உற்பத்தி போன்றவைகளே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இதற்கு கடந்த கால எதிர்மறையான அனுபவங்கள் மற்றும் மோசமான கொள்கை முடிவுகள் போன்றவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, வடகர்நாடக பகுதியில், யாத்கிர் பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்தார். கர்நாடகாவில், ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள்,
யாத்கிர் மற்றும் இதர மாவட்டங்களை பின்தங்கிய பகுதிகளாகவே பாவித்து ஆட்சி புரிந்துள்ளனர். குறிப்பாக வாக்கு வங்கி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீர், சாலைப்போக்குவரத்து போன்றவற்றுக்கு கவனம் செலுத்தப்படவே இல்லை. ஆனால் தற்போதைய அரசின் முக்கிய நோக்கமே, வளர்ச்சிப் பணிகள் மட்டுமே. வாக்கு வங்கி அரசியல் இல்லை. நம் நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நாடே வளர்ச்சியடையாது. பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து யாத்கிர் போன்ற நூற்றுக்கணக்கான கிராமங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கியது தற்போதைய அரசுதான். இந்தப் பகுதிகளில், நல்லாட்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
யாத்கிரில் மட்டுமே குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சத்துக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் சாலை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் இணைப்பு வசதிகளை பொறுத்தமட்டில், மாவட்ட அளவிலான முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் 10 மாவட்டங்களில் யாத்கிர் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த சிறந்த சாதனைகளுக்காக மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்தினர்களுக்கும் பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நீர் பாதுகாப்பு முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், எல்லை, கடலோரம்
மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். ஊக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு அணுகுமுறை மூலம் இரட்டை எஞ்சின் அரசு இயங்குகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டில் நிலுவையில் இருந்த 99 நீர்ப்பாசனத் திட்டங்களில் 50 திட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று கர்நாடகாவிலும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாராயண்பூர் இடது கரை கால்வாய் விரிவாக்கத்தின் கீழ் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கால்வாயின் கொள்ளளவு 10,000 கனஅடியாக மேம்படுத்தப்பட்டு 4.5 லட்ச ஹெக்டேர் பரப்பளவிலான பயிர் பாசனத்திற்கு பயன்படும் வகையில் அமையும். நுண்ணீர் பாசனம் மற்றும் ‘ஒரு துளி, பல பயிர்’ போன்றவற்றின் மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்த வகை நீர்ப்பாசன முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய திட்டத்தின் விளைவாக, கர்நாடக மாநிலத்தில், 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயனடையும். மேலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
மூன்றரை ஆண்டுக் காலகட்டத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் 18 கோடி கிராமப்புற குடும்பங்களில், 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டது. ஆனால் இன்று 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு அந்த வசதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 35 லட்சம் குடும்பங்கள் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்ததாகும். கர்நாடக மாநிலம் மற்றும் ஒட்டுமொத்தமாக நம் நாட்டிலேயே அதிக அளவில் யாத்கிர்
மற்றும் ரெய்ச்சூர் பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
என்றார்.
இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த பிரதமர்,யாத்கிரில் அனைத்து வீடுகளுக்கும், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான இலக்கு ஊக்களிக்கும் என்பதை சுட்டிக் காட்டினார். இந்திய நீர்வள இயக்கத்தின் தாக்கம் காரணமாக ஆண்டுதோறும் 1.25 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிப்பதாக கூறினார்.
இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு இயக்கத்தின் பயன்குறித்து குறிப்பிட்ட பிரதமர், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு
திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்கி வருவதாக எடுத்துரைத்தார். கர்நாடக அரசு மேலும் ரூ.4,000
வழங்குவதன் மூலம் இது விவசாயிகளுக்கு இரட்டிப்பு பயனை அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வேளாண் நிதி திட்டத்தின் மூலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்த சுமார் 1.25 லட்சம் விவசாய குடும்பங்கள் ரூ. 250 கோடி பெற்றுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வது குறித்து விளக்கிய பிரதமர் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு
தொடங்கியதால் வித்யாநிதி திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கர்நாடக அரசு உதவுவதாக கூறினார். மத்திய
அரசின் நடவடிக்கையால் முதலீட்டாளர்களை ஏற்கும் மாநிலமாக கர்நாடகம் மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகும் கூட பல ஆண்டுகளாக எந்த ஒரு நபர், வகுப்பினர் அல்லது பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தால் தற்போதைய அரசு அவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக கூறினார். பல ஆண்டுகளாக நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர் என்று குறிப்பிட்டார். அரசின் கொள்கைகளால் கூட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். நாட்டின் வேளாண் கொள்கையில் சிறிய விவசாயிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். இயற்கை வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்க நானோ யூரியா போன்ற ரசாயண உரங்கள் வழங்குதல், ட்ரோன்களை போன்ற நவீன தொழில்நுட்பம் ஆகியவை விவசாயிகளுக்கு உதவுவதைப் பிரதமர் உதாரணமாக குறிப்பிட்டார். வேளாண் கடன் அட்டைகள் சிறிய விவசாயிகளுக்கு
வழங்கப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனி வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாகவும் அவர்
கூறினார்.
அப்பகுதியை பருப்பு வகைகள் உற்பத்தியின் கேந்திரமாக மாற்றிய உள்ளூர் விவசாயிகளுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர் இது வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து நாட்டிற்கு உதவுவதாக குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் மூலம் 80 மடங்கிற்கும் மேற்பட்ட பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டிற்கு முன்பு சில 100 கோடி ரூபாயை பெற்று வந்த விவசாயிகளோடு ஒப்பிடுகையில், கடந்த 8 ஆண்டுகளில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 60 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறினார்.

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐநா அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், கர்நாடகாவில் சோளம், ராகி போன்ற தானியங்கள் மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்யும் நிலையில், ஊட்டச்சத்து மிக்க இந்த தானியங்களின் உற்பத்தியை அதிகரித்து, உலக அளவில் பிரபலப்படுத்த உறுதிப்பூண்டுள்ளதாக கூறினார். இந்த முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் கர்நாடக விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதன் மூலம் கர்நாடகா அடைந்து வரும் பயன் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது வேளாண்மை, தொழில்துறை, சுற்றுலா ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்ற சூரத்-சென்னை பொருளாதார வழித்தடம் மூலம் வடக்கு கர்நாடகாவின் பல பகுதிகள் பயன்பெற்று வருவதாக கூறினார். இதன் மூலம் மக்களும், வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த யாத்ரிகர்களும் சுற்றுலா தலங்களையும் எளிதில் சென்றடைய முடியும் என்று தெரிவித்தார். இது இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுயவேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று கூறினார். கர்நாடகாவை முதலீட்டாளர்களுக்கான தேர்வாக மாற்றுவதற்காக உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களில், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியின் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் இந்த முதலீடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய
இணையமைச்சர் திரு பகவந்த் கூபா கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னணி
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி போதிய அளவு பாதுகாப்பான குடிநீரை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடுத்த முயற்சியாக நீர்வள இயக்கத்தின் கீழ் யாத்கிர் மாவட்டத்தில் கொடேகலில் யாத்கிர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 117 எம்எல்டி-உடைய தண்ணீர் சுத்தகரிப்பு ஆலை கட்டப்பட உள்ளது. ரூ. 2050 கோடிக்கும் அதிகமான செலவில் நிறைவேற்றப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் யாத்கிர் மாவட்டத்தில், 3 நகரங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உள்ள சுமார் 2.3 லட்சம் வீடுகளுக்குத் தூய்மையான தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியின் போது, நாராயண்பூர் இடது கரை கால்வாய்- விரிவாக்கம் செய்யப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனப்படுத்தப்ப்பட்ட திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 4.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு 10,000 கன அடி நீர் பாய்ச்ச முடியும். இதனால் கல்புர்கி, யாத்கிர், விஜய்பூர் மாவட்டங்களில் உள்ள 560 கிராமங்களில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ. 4,700 கோடியாகும். அத்துடன் என்ஹெச்-150 சி பிரிவில் 65 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த 6 வழி பசுமை சாலை திட்டம் சூரத்- சென்னை விரைவு சாலையின் ஒரு பகுதியாகும். இது சுமார் ரூ.2,000 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

***

(Release ID: 1892163)
SMB/IR/GS/KPG/RJ/GK


(Release ID: 1892296) Visitor Counter : 237