தேர்தல் ஆணையம்
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா 2023- சட்டப்பேரவை பொதுத்தேர்தல்
Posted On:
18 JAN 2023 4:42PM by PIB Chennai
நடப்பாண்டு (2023) நடைபெற உள்ள மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 21 (சனிக்கிழமை) ஜனவரி 2023-அன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய 30 (திங்கள்) ஜனவரி 2023 அன்று கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலனை 31 (செவ்வாய்க்கிழமை) ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற 2 (வியாழன்) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்கு பதிவு 16 (வியாழன்) பிப்ரவரி 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெற உள்ளது.
மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் 31 (செவ்வாய்) ஜனவரி 2023 அன்று தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை 8 (புதன்) பிப்ரவரி 2023 அன்று நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற 10 (வெள்ளி) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்குப் பதிவு 27 (திங்கள்) பிப்ரவரி 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெற உள்ளது.
------------
PLM/IR/RS/KRS
(Release ID: 1892009)
Visitor Counter : 186