உள்துறை அமைச்சகம்

75வது விடுதலைப்பெருவிழா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதல்படி 2023 ஜனவரி 17 முதல் 23 வரை அமிர்தப் பெருவிழா முக்கிய நிகழ்வுகள் வாரத்தை உள்துறை அமைச்சகம் கொண்டாடுகிறது.

Posted On: 16 JAN 2023 6:39PM by PIB Chennai

நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழாவை முன்னிட்டு மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பெருமைமிகு சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில், அமிர்தப் பெருவிழா என்ற முன்முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 75-வது சுதந்திர தின உரையில் பிரதமர் பேசும் போது, நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் மக்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதல்படி 2023 ஜனவரி 17 முதல் 23-ம் தேதி வரை அமிர்தப் பெருவிழா முக்கிய நிகழ்வுகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த உள்துறை அமைச்சக நிகழ்ச்சிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கை வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை கருப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட உள்ளன. 2023, ஜனவரி 23 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் ப்ளேரில் நடைபெறும் நிறைவு நிகழச்சியில் உள்துறை  மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

மத்திய ஆயுதப்படை காவல் பிரிவு, மத்திய காவல் அமைப்புகள், அந்தமான் நிக்கோபார் நிர்வாகம், மணிப்பூர், நாகாலாந்து, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புடன் நேதாஜி வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புள்ள இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

***

SMB/PLM/KPG/KRS



(Release ID: 1891678) Visitor Counter : 154