இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் தார்வாடில் இன்று நிறைவடைந்த 26வது தேசிய இளையோர் விழாவில் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 16 JAN 2023 6:05PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் தார்வாடில் இன்று நிறைவடைந்த 26-வது தேசிய இளையோர் விழாவில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, மற்றும் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர்  திரு அனுராக் சிங் தாக்கூர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல்வேறு முக்கிய விவகாரங்களில் தீர்வுகளுடன் ஜி20 தலைவர்களுக்கான  ஆவணங்களை தயாரிக்கவும், இளைஞர்களுக்கான ஒய்-20 உரையாடல்கள், ஒய்-20 விவாதங்களில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

 

 

தூய்மையான, அழகான, அதிகாரமிக்க  நாட்டை கட்டமைப்பதற்கான அரசின் முன்னெடுப்புகளில் இளைய தலைமுறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இளைஞர்களின் நலனுக்காக திரு நரேந்திர மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய திரு அனுராக் சிங் தாக்கூர், நாட்டை கட்டமைப்பதில் இதனை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றார்.

அனைத்து துறைகளிலும், நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக அவர்“ கூறினார்.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக 2019-20ம் ஆண்டுக்கான தேசிய இளையோர் விருது 19 தனி நபர்களுக்கும், 6 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டன.

***

SG/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1891659) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia , Telugu , Kannada