வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கடந்த 2 ஆண்டுகளில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் ரூ.4,606.36 கோடி மதிப்பிலான 40.07 லட்சம் கடனுதவிகளை 2 கட்டமாக 45.32 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: ஹர்தீப் சிங் பூரி
இடுகை இடப்பட்ட நாள்:
13 JAN 2023 5:34PM by PIB Chennai
கடந்த 2 ஆண்டுகளில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் ரூ.4,606.36 கோடி மதிப்பிலான 40.07 லட்சம் கடனுதவிகளை 2 கட்டமாக 45.32 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
“பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. டிஜிட்டல் இந்தியா மூலம் சாலையோர வியாபாரிகளும் டிஜிட்டல் முறைகளில் பரிவர்த்தனைகள் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் ரூ.45,000 கோடிக்கும் மேலான மதிப்பில் 37.70 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. சாலையோர வியாபாரிகள் வங்கிகளை அணுகி கடன் பெறுவதற்கும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு தேவையில்லாத வகையில் சிரமங்களை ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
------
AP/Gs/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1891066)
வருகையாளர் எண்ணிக்கை : 259