நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி வெட்டியெடுப்பதற்கான வணிக ரீதியிலான ஏலத்திற்கு டெண்டர்களை ஜனவரி 13 வரை சமர்ப்பிக்கலாம்

Posted On: 10 JAN 2023 9:07AM by PIB Chennai

ஆறாவது தொகுப்பு மற்றும் ஐந்தாவது தொகுப்பின் 2-ம் கட்டத்தைச் சேர்ந்த 141 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் 2022, நவம்பர் 3-ந் தேதி தொடங்கியது. நிலக்கரி சுரங்கங்களின் அளவில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டன..

பல்வேறு கருத்துக்களை பரிசீலித்த பின்னர், ஏலதாரர்கள் தங்களது டெண்டர்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 13-ந் தேதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடியாக டெண்டர்களை சமர்ப்பிப்பவர்கள் அதே நாளில் மாலை 4 மணி வரை அளிக்கலாம். ஜனவரி 16-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஏலதாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் டெண்டர்கள் திறக்கப்படும்.

********



(Release ID: 1889902)

PKV/RR


(Release ID: 1889913) Visitor Counter : 179