வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி சமூகத் துறை உள்கட்டமைப்பு தொடர்பான தரவு அடுக்குகள் சரிபார்ப்பு

प्रविष्टि तिथि: 07 JAN 2023 2:34PM by PIB Chennai

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தை செயல்படுத்த, சுகாதாரம்கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, கிராம பஞ்சாயத்துகள், மாநகராட்சி, சமூக நல வீட்டுவசதி போன்றவற்றின் முக்கிய சொத்துக்கள் குறித்த தரவு அடுக்குகள் வரைபடமாக்கப்பட்டு, சரிபார்ப்பு செய்யப்படுகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை சிறப்புச் செயலாளர் (லாஜிஸ்டிக்ஸ்) தலைமையில், புது தில்லி வணிஜ்ய பவனில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது இது தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், வீட்டுவசதி அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை, உயர்கல்வித் துறை, பழங்குடியினர் நல அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், விளையாட்டு துறை , ஊரக வளர்ச்சி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தபால் துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல், சுவாரஸ்யமான மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பயனுள்ள யோசனைகள் உருவாக்கப்பட்டன. 

*****

 

MS/PKV/DL


(रिलीज़ आईडी: 1889412) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Kannada