ஜல்சக்தி அமைச்சகம்

நீர்வளம் குறித்த அனைத்திந்திய வருடாந்திர மாநில அமைச்சர்கள் 2-நாள் மாநாடு

Posted On: 04 JAN 2023 2:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடான வரும் 2047-ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்னேடுத்து செல்லும் முயற்சியாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நீர்வளம் குறித்த அனைத்திந்திய வருடாந்திர மாநில அமைச்சர்கள் 2-நாள் மாநாட்டை ஜனவரி 5,6 தேதிகளில்  மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் நடத்துகிறது.

இந்த 2-நாள் மாநாட்டின் கருப்பொருள் “நீர் நோக்கம்@2047” ஆகும். நீர் பாதுகாப்பு, அவசியத்திற்கு நீர் பயன்பாடு, நீர் மேலாண்மை, நீர் உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு முக்கியத் தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெறும்.  இந்த மாநாட்டில் நீர் ஆதாரத் துறையின் மாநில அமைச்சர்கள், பொது சுகாதாரப் பொறியியல் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நீர் பாசனத்துறை ஆகியவைகள் பங்கு பெறுகின்றன. இந்த மாநாட்டின் கருப்பொருளான நீர் நோக்கம்@2047 சாத்தியப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.  மேலும் நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் மத்தியப்பிரதேச  மாநில முதல்வர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவாத், மத்திய ஜல் சக்தி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர்  திரு பிரகலாத் சிங் படேல், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ்,  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நீர் ஆதாரம்,  பொது சுகாதாரப் பொறியியல் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நீர் பாசனத்துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888514

********

AP/GS/RJ/KPG



(Release ID: 1888551) Visitor Counter : 198