கூட்டுறவு அமைச்சகம்

ஆண்டுக் கண்ணோட்டம் 2022 : கூட்டுறவு அமைச்சகம்

Posted On: 03 JAN 2023 11:19AM by PIB Chennai

குஜராத்தின் பரூச்சில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு கல்வி நிலையத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். (ஜூன் 03, 2022)

இந்த நிலையம் கட்டப்படுவது மக்களுக்கு கல்வி அளிப்பது மட்டுமின்றி கூட்டுறவுத்துறையின் அடிப்படைகள், முக்கியத்துவம் குறித்த ஞானத்தையும் அளிக்கும்.

இந்தப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டபின் இதில் கணினிக் கூடம், கூட்டுறவு நூலகம் மற்றும் பொது அறிவு மையமாகவும் செயல்படும்.

ரூ.3.25 கோடி செலவில் இந்த நவீன பயிற்சி மையத்தை கட்டமைக்க பரூச் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முடிவு செய்துள்ளது.

தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. (ஜூன் 29, 2022)

ரூ.2,516 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 13 கோடி குறு, சிறு விவசாயிகள் பயனடைவார்கள்.

 கூட்டுறவுத்துறைக்கு மிக முக்கியமான கொள்கை முடிவுகளை 2022 ஜூன் 08 அன்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் மூலம் அடுக்கு-1 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் வீட்டுவசதிக்கான கடன் வரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாகவும், அடுக்கு 2-ன் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் வீட்டுவசதிக்கான கடன் வரம்பு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.1.40 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  ஊரக கூட்டுறவு வங்கிகளில்  இந்த கடன் தொகை முறையே ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக 2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட்டது.  இது 2021-22 பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

வெளிப்படைத் தன்மை, திறன், சிக்கனமான கொள்முதல் நடைமுறை ஆகியவற்றில் ஒருபடி முன்னேற்றமாக கூட்டுறவு சங்கங்கள் அரசு இ-சந்தை தளத்தில் சேர்க்கப்பட்டன.  (ஜூன் 02,2022)

 நிர்வாகம், வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், பதில் சொல்லும் கடமையை அதிகரித்தல், தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு  பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2022-ல்  திருத்தம் செய்யும் மசோதா  நாடாளுமன்ற மக்களவையில்  7.12.2022-ல் தாக்கல் செய்யப்பட்டு, 20.12.2022-ல் கூட்டு நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

கூட்டுறவு அமைச்சகமும், இந்திய தேசிய கூட்டுறவு சங்கமும் இணைந்து ஜூலை 04.2022 அன்று விஞ்ஞான் பவனில்  100-வது சர்வதேச கூட்டுறவு தினத்தை கொண்டாடின.

 இந்த விழாவில் பேசிய  மத்திய உள்துறை  மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  திரு அமித் ஷா, எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்த தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த  திறமையுடன் கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்துவதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

2022 டிசம்பர் 30 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற  கூட்டுறவு பயனாளிகள் மாநாட்டில் மத்திய உள்துறை  மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  திரு அமித் ஷா உரையாற்றினார்.

கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியதன் மூலம் கூட்டுறவு இயக்கத்திற்கு புதிய வேகத்தையும், நீடித்த வாழ்வையும் பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பதாக அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.

************************



(Release ID: 1888285) Visitor Counter : 215