ரெயில்வே அமைச்சகம்

பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே வருவாய் 71% அதிகரித்துள்ளது

Posted On: 02 JAN 2023 3:42PM by PIB Chennai

2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.28569 கோடி ஈட்டியிருந்தது.

 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 56.05 கோடியாக இருந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 46 சதவீதம் அதிகமாக ரூ.38483 கோடி ரூபாய் ஈட்டியது.  அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26400 கோடி ஈட்டியிருந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல்  டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40197 லட்சமாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 16,968 ஆக இருந்தது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகள் மூலமான வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10.430 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2169 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.

***

AP/IR/AG/KPG



(Release ID: 1888057) Visitor Counter : 141