நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நிலக்கரித் துறை 8 சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்கத் திட்டம்; 2023-ம் ஆண்டில் மேலும் 2 பூங்காக்கள் முழுமை பெறும்

Posted On: 30 DEC 2022 1:13PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகம் சுரங்க நிலத்தை மறுபயன்பாட்டின் மூலம் சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் 8 பூங்காக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மேலும் 2 பூங்காக்களின் பணிகள் முழுமை பெறும்.

மத்திய நிலக்கரி, சுரங்கம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பிரலாத் ஜோஷி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெஸ்ட்டன் கோல்பீல்டுஸ் லிமிடெட்டின் ஜூரே/ பால கங்காதர திலக் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார். நெய்வேலி லிக்னெட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சுரங்கம்-1,சுரங்கம்-2 ஆகியவற்றில் சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றியது ஆகும்.

நார்தன் கோல்பீல்டுஸ் லிமிடெட் மற்றும் மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியம் சிங்குருலியில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் பல்வேறு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் 2300 ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 47 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

•••••

 

AP/GS/RR/KRS


(Release ID: 1887531) Visitor Counter : 186