சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
26 DEC 2022 5:57PM by PIB Chennai
சுரங்கப்பணிகள் தொடர்பான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்கள் மற்றும் விதிமுறை மாற்றங்கள், சுரங்கப்பணிகளில் வேகத்தை அதிகரித்துள்ளதுடன் வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளன.
2022-ம் ஆண்டில் சுரங்கத்துறை அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் அந்த அமைச்கத்தின் சாதனைகளில் சில:
- இந்த ஆண்டில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மற்றும் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஏராளமான சுரங்கங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தினார். இதன் மூலம் பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் செயல்திறன் மேலும் அதிகரித்துள்ளது.
- சுரங்க அமைச்சகம் தில்லியிலும் பல்வேறு மாநிலங்களிலும் தேசிய சுரங்க கருத்தரங்கங்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்தியதன் மூலம் இத்துறையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
- 90 சுரங்கங்களின் வெற்றிகரமான ஏல நடவடிக்கை, மாவட்ட கனிம அறக்கட்டளைகள் 622 மாவட்டங்களில் அமைக்கப்பட்டது மற்றும் ரூ.71,128.71 கோடி அவற்றின் மூலம் ஈட்டப்பட்டது ஆகியவை இந்த ஆண்டின் முக்கிய சாதனைகளில் சிலவாகும்
- தாதுப் பொருட்கள் ஏலம் தொடர்பான திருத்த விதிகள் குறித்த அறிவிக்கை 18-02-2022 அன்று வெளியிடப்பட்டது. சுரங்கம் மற்றும் தாது மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்டம் 1957 2-வது பிரிவு திருத்தப்பட்டது. இது போன்ற விதிமுறை திருத்த நடவடிக்கைகளால் பல்வேறு தாதுப் பொருட்களின் சுரங்க உற்பத்தி நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
- தேசிய அலுமினிய நிறுவனமான நால்கோ, இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், கனிமப் பொருட்கள் நிறுவனமான எம்இசிஎல் ஆகியவை இணைந்து உருவாக்கிய கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் நிறுவனம் (கபில்) வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பேட்டரி கனிமங்களான லித்தியம், கோபால்ட் உள்ளிட்டவைகளை அடையாளம் கண்டு மேம்படுத்தி வணிக ரீதியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- கபில் நிறுவனம் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் 2021—22-ஆம் நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.381.72 கோடியை ஈட்டியுள்ளது.
- தேசிய அலுமினியம் நிறுவனமான நால்கோ 2021-22-ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.2,952 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
- நால்கோ நிறுவனம் 2021-22-ஆம் நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 75,11,000 டன் பாக்ஸைட்டை உற்பத்தி செய்துள்ளது.
- சுரங்கம் மற்றம் உலோகத்துறையில் நிலைத்தன்மைக்காக 2021-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோல்டன் பீக்காக் விருதை நால்கோ நிறுவனம் வென்றுள்ளது.
- தாதுப் பொருட்கள் நிறுவனமான எம்இசிஎல், 2022 நவம்பர் வரை ரூ.173.86 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.
- நவம்பர் 2022 வரை எம்இசிஎல் நிறுவனம் நிலக்கரி, லிக்னைட், தாமிரம், இரும்புத்தாது, மாங்கனீசு, கிராஃபைட், பொட்டாஷ் உள்ளிட்ட 26 தாதுப்பொருட்கள் தொடர்பான புவி அறிக்கைகைள சமர்ப்பித்துள்ளது.
- இந்திய சுரங்க அமைப்பான ஐபிஎம் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
- நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி மேம்பாடு வடிவமைப்பு மையம் இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை 3 திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளதுடன் 13 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- தேசிய பாறைகள் இயக்கவியல் நிறுவனமான என்ஐஆர்எம் கட்டடவியல் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 66 திட்டங்களை நிறைவு செய்துள்ளது.
- சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள், சுரங்கப் பணிகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடாமல் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பல்வேறு சமூகப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தூய்மை இந்தியா இயக்கம் கல்வி மேம்பாடு, மருத்துவ முகாம்களை நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்வதன் மூலம் சமூக மேம்பாட்டுக்கும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886725
----
SM/PLM/KPG/KRS
(Release ID: 1886850)
Visitor Counter : 307