குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் ஆண்டு கண்ணோட்டம்-2022

Posted On: 26 DEC 2022 5:21PM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை 6 கோடிக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய துறையாக விளங்குகிறது.  வேளாண் துறைக்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டு செலவுடன் தொழில்துறையினரை உருவாக்கி சுய வேலைவாயப்புகளை இது ஏற்படுத்துகிறது.  கடன் உதவி, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி காதி, கிராம மற்றும் கயிறு தொழில் நிறுவனங்கள் உட்பட இத்துறையின் வளர்ச்சியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்காக புதுதில்லியில் 30.6.2022-ல் உத்யாமி பாரத்  திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முன்னோடி மாவட்டங்கள் மற்றம் வங்கிகள் ஆகியவற்றிற்கு தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விருதை பிரதமர் வழங்கினார்.

முதல் முறையாக ஏற்றுமதியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் திறன் மேம்பாட்டு திட்டம் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் புதிய நெறிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.  

2022-23-ம் ஆண்டுக்கான  பிரதமரின் வேலை உருவாக்கத் திட்ட பயனாளிகள் டிஜிட்டல் முறையில் நிதியுதவி பரிமாற்றம் செய்தார்.  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டி வெற்றியாளர்களை அவர் அறிவித்தார். தற்சார்பு இந்தியா நிதியத்தின் 75 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பயனாளிகளுக்கு டிஜிட்டல் பங்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

உற்பத்தி ஆலை மற்றும் இயந்திரம் அல்லது உபகரணம் ஆகியவற்றின் முதலீடு மற்றும் மொத்த விற்பனை அளவை அடிப்படையாக கொண்டு உத்யம் பதிவு இணையதளம் 1-7-2020 அன்று தொடங்கப்பட்டது.  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எளிதில் வர்த்தகம் புரியும் வகையில் முழுவதும் இணையதளம் வாயிலாக கட்டணமின்றி எந்த ஆவணமும் இல்லாமல் பதிவு செய்து விடலாம். 2-8-2022 அன்று நிலவரப்படி சாதனை அளவாக 1 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றன. 22-12-2022 அன்றைய நிலவரப்படி இந்த இணையதளத்தில் 1.28 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகள் இடம் பெற்றன. 

14-9-2022 அன்று நடைபெற்ற தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை வாரியக் கூட்டத்தின் போது 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் உத்யம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டுச் சேவை இணையதளங்களில் ஒருங்கிணைப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

14-9-2022 முதல் உத்யம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள  4.06 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டிச் சேவை இணையதளத்தை பயன்படுத்தி உள்ளனர். 

கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற இந்திய வர்த்த்க மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 41-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அரங்கை அத்துறைக்கான அமைச்சர் தொடங்கி வைத்தார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்காக 204 அரங்குகள் ஒதுக்கப்பட்டன.  இதில் 7 சதவீதம் மாற்றுத்திறனாளிகளின் நிறுவனங்களுக்கும் 12 சதவீதம் ஷெட்யூல்டு  வகுப்பை சேர்ந்த ஆண்களுக்கும் 6 சதவீதம் முன்னோடி மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அதிகளவில் மகளிரை உரிமையாளராகக் கொண்ட நிறுவனங்கள் (73%) பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886709

**************

SM/IR/RJ/KRS



(Release ID: 1886742) Visitor Counter : 234