பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

2023 -ம் ஆண்டு பருவத்திற்கான கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 DEC 2022 8:41PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 2023ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வேளாண் செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் தென்னை அதிகமாக விளையும் மாநிலங்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரவைக் கொப்பரையின் சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10860 ஆகவும் பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ. 11750 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பருவத்தைக் காட்டிலும் அரவைக் கொப்பரைக்கு ரூ. 270-ம் பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ. 750ம் அதிகம் ஆகும். இது அகில இந்திய அளவில் சராசரி உற்பத்திச் செலவைக் காட்டிலும் அரவைக் கொப்பரைக்கு 51.82 சதவீதமும், பந்து கொப்பரைக்கு 64.26 சதவீதமும் என்ற வரம்பை உறுதி செய்யும். 2023-ம் ஆண்டு பருவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள கொப்பரை குறைந்தபட்ச கொள்முதல் விலை ஆனது, 2018-19 பட்ஜெட்டில் அரசு அறிவித்தபடி, அகில இந்திய அளவில் சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அதிகமான அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் கொள்கைக்கு இணங்க அமைந்துள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் இது முக்கியமான மற்றும் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவை கொப்பரை மற்றும் உமி நீக்கப்பட்ட தேங்காயை விலை ஆதரவு திட்டத்தின் (PSS) கீழ் கொள்முதல் செய்வதற்கான மத்திய முகமைகளாக (CNA) தொடர்ந்து செயல்படும்.

**************

SM/PLM/DL


(Release ID: 1886258) Visitor Counter : 302