உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உழவர் தினத்தையொட்டி நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 DEC 2022 3:19PM by PIB Chennai

உழவர் தினத்தையொட்டி நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திரு அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகள் நலனுக்காக பாடுபட்டார். அவர் வளமான விவசாயிகள் மற்றும் வலுவான விவசாய அமைப்புகள் மூலமே ஒளிரும்  இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை நம்பினார். அவருடைய பிறந்த நாளில் சவுத்ரி அவர்களை நினைவு கூர்ந்து, தலை வணங்கி அனைவருக்கும் விவசாயிகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**************

 

SG/GS/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1886071) வருகையாளர் எண்ணிக்கை : 266
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , Gujarati , Telugu , Malayalam