சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 413 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 733 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன
Posted On:
22 DEC 2022 1:25PM by PIB Chennai
மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களுடனான ஆலோசனையின்படி மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்களை அமைத்து வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். உயர்நீதிமன்றங்கள் அளித்த தகவலின்படி 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேலும் 242 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (31.12.2017-ன்படி 596 விரைவு நீதிமன்றங்கள் இருந்த நிலையில், அது 31.10.2022-ல் 838 விரைவு நீதிமன்றங்களாக அதிகரித்துள்ளது.
2019-ல் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 389 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. உயர்நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 413 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 733 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1,24,000-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 31.10.2022 அன்று வரை 1,93,814 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
**************
AP/IR/KPG/GK
(Release ID: 1885730)