சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை மேற்கொள்வதற்கு மருத்துவமனைகள், ஆய்வகங்கள், டிஜிட்டல் சுகாதார சேவையாளர்களுக்கு ரூ.4 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க தேசிய சுகாதார ஆணையம் திட்டமிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
22 DEC 2022 11:01AM by PIB Chennai
டிஜிட்டல் சுகாதார அமைப்புகளுக்கான டிஜிட்டல் சுகாதார ஊக்கத்தொகை திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் டிஜிட்டல் சுகாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள், டிஜிட்டல் சுகாதார சேவையாளர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் டிஜிட்டல் சுகாதார ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.4 கோடி வரை தகுதியுடைய சுகாதார நிறுவனங்கள் பெற இயலும்.
**************
AP/IR/KPG/GK
(रिलीज़ आईडी: 1885648)
आगंतुक पटल : 290