பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சக செயல்பாட்டின் ஆண்டுக் கண்ணோட்டம்
प्रविष्टि तिथि:
21 DEC 2022 2:28PM by PIB Chennai
மகளிரின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரம் அளித்தலை மேம்படுத்தும் வகையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் அமைப்புகள்:
திட்டங்கள் அமலாக்கப்படுவதை கண்காணிக்கவும், சிறந்த முறையில் அமல்படுத்தவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 3 அமைப்புகளைக் கொண்டுள்ளது. குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வி. மகளிருக்கு அதிகாரம் அளித்தல் பாதுகாப்புக்கான சக்தி இயக்கம், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக வத்சலாயா இயக்கம் ஆகியவற்றுக்காக முறையே 15-வது நிதிக் குழுவில் ரூ.20,989 கோடி, ரூ.10,916 கோடி, ரூ.1,02,031 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சக்சம் அங்கன்வாடி மற்றும் 2-ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கம்
இந்த இயக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சகம் வெளியிட்டது. ஆண்டுக்கு 40,000 அங்கன்வாடி மையங்கள், முன்னோடி மாவட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. ஊட்டச்சத்து மற்றும் கல்வியில், தரத்தை மேம்படுத்த இது செயல்படுத்தப்படுகிறது. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் முன்னோடி மாவட்டங்களில் உள்ள 40,000 சக்சம் அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை, அங்கன்வாடி ஊழியர்களுக்கு 11.22 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
போஷான் செயலி
கூடுதல் ஊட்டச்சத்து பொருட்கள் அளிக்கப்படுவதை கண்காணிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் போஷான் செயலி உருவாக்கப்பட்டது. 31.10.2022 வரை 9.84 கோடி பயனாளிகள் இதில் பதிவு செய்துள்ளனர்.
போஷான் பக்வாடா (21 மார்ச் - 4 ஏப்ரல் 2022):
நடப்பாண்டு மார்ச் 21 முதல் ஏப்ரல் 4 வரை போஷான் பக்வாடா நடத்தப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 6 வயது வரையிலான குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கண்காணித்தல் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பாரம்பரிய உணவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய ஊட்டச்சத்து மாதம் (செப்டம்பர் 2022)
5-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2022 செப்டம்பரில் கிராமப்பஞ்சாயத்துக்களில் கொண்டாடப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு, உள்ளிட்ட தலைப்புகளில் இவை நடத்தப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் 15 கோடிக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் இந்த ஊட்டச்சத்து மாதத்தில் நடைபெற்றது.
கொவிட் -19 ஆல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிஎம் கேர் நிதி
கொவிட்-19 ஆல் பெற்றோர், பெற்றோரில் ஒருவர், காப்பாளர் அல்லது வளர்ப்பு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக பிஎம் கேர் நிதியம், மே 29, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4,345 குழந்தைகள் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885352
**************
AP/IR/KPG/GK
(रिलीज़ आईडी: 1885433)
आगंतुक पटल : 436