வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

இரண்டாவது கட்ட அம்ருத் இயக்கத்தின் கீழ் குடிநீர் ஆய்வின் நில அளவை துவக்கம்

Posted On: 21 DEC 2022 11:47AM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், குடிநீர் ஆய்வின் நில அளவையை டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கியது.  இரண்டாவது கட்ட புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) கீழ் செப்டம்பர் 9, 2022 அன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, குடிநீர் ஆய்வைத் தொடங்கி வைத்தார்.

தண்ணீரின் விநியோகம், தரம், அளவு, கழிவு நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, தண்ணீரின் மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி, 500 அம்ருத் நகரங்களில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாத்தல் முதலியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. கண்காணிப்பு கருவியாகவும், அம்ருத் இயக்கத்தைத் துரிதப்படுத்தவும் இந்த ஆய்வு பயனளிப்பதோடு, நகரங்களிடையே ஆரோக்கியமான போட்டியையும் வளர்க்கும்.

ஆய்வில் கலந்து கொள்ளும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திற்கும் குடிநீர் ஆய்வு மற்றும் இணையதளம் பற்றிய திறன் கட்டமைப்பு பயிலரங்குகளை அமைச்சகம் நடத்தியுள்ளது. தண்ணீர் பயன்பாட்டு சேவைகள், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை உபயோகப்படுத்தும் சேவைகள், நீர்நிலைகள், வருவாய் அல்லாத நீரின் மதிப்பீடு, சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் முதலிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

ஒவ்வொரு நகரில் உள்ள தண்ணீரின் வளத்தின் அடிப்படையில் நகரங்கள் மதிப்பிடப்படும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நீர் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வின் முடிவு பிரதிபலிப்பதோடு,  நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885304

(Release ID: 1885304)

**************



(Release ID: 1885398) Visitor Counter : 132