கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே பாரதம் நிருத்ய உத்சவம் 2023: இறுதிப் போட்டியில் 980 நடனக் கலைஞர்கள் பங்கேற்பு

Posted On: 20 DEC 2022 1:06PM by PIB Chennai

வந்தே பாரதம் நிருத்ய உத்சவம் 2023 என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான போட்டியை மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 19-ஆம் தேதி, தில்லி ஜவஹர்லால் நேரு அரங்கில் இந்தப் போட்டி தொடங்கியது. தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக 980 நடனக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (டிசம்பர் 20, 2022) மாலை நடைபெறும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியை உள்ளடக்கிய சிறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய மாகாண வளர்ச்சிக்கான அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மத்திய கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

2023 குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள், வந்தே பாரதம் நிருத்ய உத்சவம் 2023 என்ற நடனப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன. மாநில, மண்டல மற்றும் தேசிய அளவில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டியில் கலந்து கொள்பவர்களுள் 500 நடனக் கலைஞர்கள், 2023 குடியரசு தினத்தின் போது நடைபெறும் பிரம்மாண்டமான கலாச்சார விழாவில் 'பெண் சக்தி' என்ற கருப்பொருளிலான நடன நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

**************

AP/RB/KRS


(Release ID: 1885063) Visitor Counter : 194