பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாடு தழுவிய நல்லாட்சி வார பிரச்சாரத்தை 19 ந்தேதி தொடங்கி வைக்கிறார்
Posted On:
18 DEC 2022 4:38PM by PIB Chennai
கிராமப்புறங்களுக்கு நிர்வாகத்தை கொண்டு செல்லும் நாடு தழுவிய நல்லாட்சி வார பிரச்சாரத்தை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களால் அடையாளம் காணப்பட்ட 3,120 புதிய சேவைகள் ஆன்லைன் சேவை வழங்கலில் சேர்க்கப்படும் .
டிசம்பர் 10-18, 2022 வரை நடைபெற்ற நல்லாட்சி வார ஆயத்தக் கட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர்கள் 81,27,944 சேவைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை கண்டறிந்துள்ளனர், அத்துடன் மாநில குறைதீர்ப்பு இணையதளங்களில் நிவர்த்தி செய்ய வேண்டிய 19,48,122 மனுக்களும் பெறப்பட்டன. டிசம்பர் 23, 2022 அன்று மாவட்ட அளவிலான பயிலரங்குகளில் கலந்துரையாடுவதற்காக 373 சிறந்த நல்லாட்சி நடைமுறைகள் கண்டறியப்பட்டதாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் முழுவதும் நல்லாட்சி வார விழாவின் வெற்றிக்காக பிரதமர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். பிரதமர் தமது செய்தியில், “இந்த ஆண்டும், கிராம அளவில் நிர்வாகம் பிரச்சாரம் நல்லாட்சி வாரத்தின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது என்பதைக் குறிப்பிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், ஆன்லைன் சேவைகள், சேவை வழங்கல் விண்ணப்பங்களை அகற்றுதல் மற்றும் நல்ல நிர்வாக நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு குடிமக்களை மையப்படுத்திய முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சேவை வழங்கல் வழிமுறைகளை மேலும் திறம்படச் செய்வதே நமது நோக்கம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெறும். இந்த பிரச்சாரத்தில் 700க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பார்கள். அதிகாரிகள் தாலுகாக்கள் மற்றும் பஞ்சாயத்து சமிதி தலைமையகங்களுக்கு வருகை தருவார்கள்.
டாக்டர் ஜிதேந்திர சிங், நல்லாட்சி வாரம் 2022 www.pgportal.gov.in/GGW22 என்ற தளத்தை தொடங்குகிறார்.2022 ஆம் ஆண்டில் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை வெளியிடப்படும்.
டிசம்பர் 10-18, 2022 முதல் நல்லாட்சி வாரம் 2022 ஆயத்தக் கட்டம் நடைபெற்றது. டிசம்பர் 19-25, 2022 காலப்பகுதியில் அவற்றுக்கு தீர்வு காணப்படும்.
சேவை வழங்கலின் கீழ் 81,27,944 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
19,16,142 மாநில குறைதீர்ப்பு இணையதளங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன
சிபிகிராம்ஸ்-ல் 31,980 இல் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன
ஆன்லைன் சேவை வழங்குதலுக்காக சேர்க்கப்பட்ட புதிய சேவைகளின் எண்ணிக்கை 3120
சிறந்த நல்லாட்சி நடைமுறைகள் 373
பொதுக் குறைகளில் வெற்றிக் கதைகள் 43
சேவை வழங்கல் விண்ணப்பங்கள் பிரிவில் - மத்தியப் பிரதேச மாவட்டங்கள் 55,72,862 இலக்கையும், பஞ்சாப் மாவட்டங்கள் 21,96,937 இலக்கையும் அடையாளம் கண்டுள்ளன. பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் பிரிவில், மத்தியப் பிரதேச மாவட்டங்கள் 16,67,295 குறைகளையும், தமிழ்நாடு மாவட்டங்கள் 1,38,621 குறைகளையும் தீர்வு காண்பதற்காக கண்டறிந்துள்ளன.
**************
SM/PKV/DL
(Release ID: 1884612)
Visitor Counter : 178