இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் பாட்டியாலா இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் 300 படுக்கைகள் கொண்ட புதிய விடுதியைத் திறந்து வைத்தார்

Posted On: 17 DEC 2022 2:53PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் நேதாஜி சுபாஸ் தேசிய விளையாட்டுக் கழகத்திற்கு  சென்று பார்வையிட்டதுடன், ரூ. 26.77 கோடி செலவில் கட்டப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட புதிய விடுதியைத் திறந்து வைத்தார்.

ரூ.5.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தாக்கூர் , "விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதே அரசின் முயற்சியாகும். அனைத்து கொள்கைகளிலும் விளையாட்டு வீரர்களை மையமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்தி வருகிறார்.  இந்த புகழ்பெற்ற மையத்தில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் வசதிகளை  மேம்படுத்தும் வகையில்இந்த 300 படுக்கைகள் கொண்ட புதிய  தங்கும் விடுதியும், பழைய தங்கும் விடுதிகளை மேம்படுத்துதியும் திறந்திருப்பது அரசின் முயற்சிகளில் மற்றொரு படியாகும்." என்று கூறினார்.

 பாட்டியாலா  மையத்தில், கல்விப் படிப்புகளில் முதல் முறையாக கூடுதலாக ஒரு விளையாட்டு செயல்திறன் பகுப்பாய்வு பாடத்திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த பாடத்திட்டத்தின் முதல் தொகுதி மாணவர்களுடன் உரையாடிய  திரு. தாக்கூர் , "ஒரு தடகள வீரரின் உண்மையானத் திறனை மதிப்பிடுவதற்கு விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு செயல்திறன் பகுப்பாய்வுகளை சேர்ப்பது மிகவும் முக்கியமானது, இது சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்ல முடியும்." என்றார்.

400 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், மேலும் விளையாட்டுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, நாட்டைப் பெருமைப்படுத்துமாறு ஊக்கமளித்தார்.  விளையாட்டு வீரர்களுக்கு மையத்தில் உள்ள வசதிகள் மற்றும் தற்போதைய அமைப்பில் அவர்கள் விரும்பும் மேம்பாடுகளைப் பற்றிய கருத்துக்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

**************

AP/PKV/DL



(Release ID: 1884403) Visitor Counter : 1071