வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 12.6 சதவீதம் உயர்வு
நாட்டின் சேவைத் துறை ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் 31.43 சதவீதம் அதிகரிப்பு
Posted On:
16 DEC 2022 3:54PM by PIB Chennai
- கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 234.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 2022-23 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 263.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 12.6 சதவீத வளர்ச்சி ஆகும்
- 2021-22 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 138.01 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இருந்து சேவைத் துறை ஏற்றுமதி, 2022-23 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 181.39 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 31.43 சதவீத வளர்ச்சி ஆகும்
- 2021-22 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 371.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இருந்த மருத்துவப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 444.74 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 19.56 சதவீத வளர்ச்சி ஆகும்.
- வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறன் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
- ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை போதுமான அளவு மற்றும் தேவையான தரத்துடன் உற்பத்தி செய்வதில் உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் / உற்பத்தியாளர்களை ஆதரிக்க தேவையான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் 16.09.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி வெளிநாட்டு வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- புதிய ஏற்றுமதிக் கொள்கையை வகுப்பதில் அரசு சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ஐ, செப்டம்பர் 30, 2022 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தேயிலை வாரியம், காஃபி வாரியம், மசாலாப் பொருட்கள் வாரியம், ரப்பர் வாரியம் ஆகியவையும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் இணைந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
- அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதைய 60 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக அதிகரிக்க உதவும் வகையில் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் 1 மே 2022 முதல் அமலுக்கு வந்தது.
- இந்தியா-சவுதி அரேபியா இடையேயான கூட்டு செயல்திட்டக் கவுன்சிலின் கீழ் நடைபெற்ற பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக் குழுவின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் 40 க்கும் மேற்பட்ட பிரிவுகளில், கூட்டுப் செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்த முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- இந்தியாவும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (ஜிசிசி) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
- இந்திய-கனடா இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 5-வது பேச்சுவார்த்தையின்போது இந்திய வாழைப்பழங்கள் மற்றும் சோளத்தை கனடாவுக்கு ஏற்றுமதி செய்து அந்நாட்டில் சந்தை அணுகலை வழங்கும் அனுமதியை கனடா வழங்கியது.
- இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இஸ்ரேலுடன் சேவைகள் வர்த்தகம் உட்பட இருதரப்பு தடையற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884123
**************
SM/PLM/KRS
(Release ID: 1884301)
Visitor Counter : 232