சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாக்பூரில் மிகநீளமான டபுள்டக்கர் நெடுஞ்சாலை மேம்பாலம் & மெட்ரோ ரயிலை ஒரே நேரத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த என்எச்ஏஐ மற்றும் மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் திரு நிதின்கட்கரி பாராட்டு

Posted On: 05 DEC 2022 4:31PM by PIB Chennai

நாக்பூரில் மிகநீளமான டபுள்டக்கர் (இரட்டை அடுக்கு) நெடுஞ்சாலை மேம்பாலம் & மெட்ரோ ரயிலை ஒரே நேரத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த என்எச்ஏஐ மற்றும் மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் திரு நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயிலை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திரு நிதின் கட்கரி, இந்த சாதனைக்கு வித்திட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

**************

AP/ES/AG/IDS


(Release ID: 1881009) Visitor Counter : 171