எஃகுத்துறை அமைச்சகம்
வைசாக் மாரத்தான் ஓட்டத்தின் முன்னோடி விளம்பர ஓட்டத்தை ஆர்ஐஎன்எல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு அதுல் பட் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
04 DEC 2022 5:18PM by PIB Chennai
வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள வைசாக் மாரத்தான் ஓட்டத்தின் முன்னோடி விளம்பர ஓட்டத்தை விசாகபட்டணம் ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் உக்கு ஸ்டேடியத்தில் ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு அதுல் பட் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிறுவனத்தின் இயக்குநர் திரு டி.கே. மொஹந்தி, மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் தலைமை பொது மேலாளர் டாக்டர் கே.எச்.பிரகாஷ், முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு எம்எஸ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். விளம்பர ஓட்டத்தில் வைசாக் ரன்னர் சொசைட்டியும் பங்கேற்றது.
ஏற்பாட்டாளர்களின் முயற்சிகளைப் பாராட்டிய, திரு அதுல் பட், இதுபோன்ற உடல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். அறிவுறுத்தினார். திரு அதுல் பட், திரு டி.கே. மொஹந்தி, டாக்டர் கே.எச்.பிரகாஷ், திரு எம்.எஸ்.குமார், திரு பால்கிருஷ்ண ராய் ஆகியோரும் ஓட்டத்தில் பங்கேற்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தடகள வீரர்கள் சங்கங்கள் மற்றும் குழந்தைகள், வைசாக் ஸ்டீல் 5 கே விளம்பர ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
******
AP/PKV/DL
(Release ID: 1880821)
Visitor Counter : 166