தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அகில இந்திய வானொலி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு சொற்பொழிவை 2022 டிசம்பர் 3ம் தேதி ஒலிபரப்புகிறது
Posted On:
02 DEC 2022 3:36PM by PIB Chennai
அகில இந்திய வானொலியில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் வருடாந்திர நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில், 2022 டிசம்பர் 3ம் தேதி மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா உரையாற்றுகிறார். இது 2022, டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணி முதல் ஒலிபரப்பாக உள்ளது. ரசிகர்கள் 100.1 எஃப்எம் கோல்டு, 102.6 எஃப்எம் ரெயின்போ, அகில இந்திய வானொலியின் முதன்மை அலைவரிசைகள், @airnewsalerts என்ற டுவிட்டர் பக்கம், அகில இந்திய வானொலியின் அதிகாரபூர்வ யூட்-ட்யூப் அலைவரிசை, NewsOnAir செயலி போன்றவற்றில் இதன் ஒலிபரப்பைக் கேட்டு ரசிக்கலாம்.
தூர்தர்ஷன் செய்திகளில், 2022, டிசம்பர் 3ம் தேதி காலை 10.30 மணி முதல் இந்த சொற்பொழிவு ஒளிபரப்பாகிறது.
சொற்பொழிவின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவுவிழா என்பதாகும்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு சொற்பொழிவு:
நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவாக அகில இந்திய வானொலி, சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. எளிமையின் மறுஉருவம், புகழ்பெற்ற அறிஞர், அரசியலமைப்புச் சபையின் தலைவர் என்ற பன்முகத் தன்மைக்குச் சொந்தக்காரரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்த தலைசிறந்த தொலை நோக்குப்பார்வையைக் கொண்டிருந்தவர் ஆவர்.
அவரை கவுரவிக்கும் விதமாக, கடந்த 1969ம் ஆண்டு முதல், இந்த நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி ஒலிபரப்பு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் எம். வெங்கைய்ய நாயுடு, இலக்கியவாதிகளான பிரசாத் திவிவேதி, மகாதேவி வெர்மா, ஹரிவன்ஷ் ராய் பச்சன் உள்ளிட்டோர் இந்த புகழ்பெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், இந்திய கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து சொற்பொழிவாற்றியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 3ம் தேதி அன்று, டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி, அகில இந்திய வானொலி இந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை ஒலிபரப்பு வருகிறது. தேசிய அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூக சூழல் ஆகியவற்றின் சாதனைகளை மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலம் குறித்த விமர்சனங்களும், இந்த சொற்பொழிவில் இடம்பெறுவது உண்டு.
*****
SM/ES/RR/IDS
(Release ID: 1880514)
Visitor Counter : 197