தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஒவ்வொருவரும் தங்கள் மனதளவில் இயக்குனர்களே என்பதே சினிமா பந்தி திரைப்படத்தின் மையக் கரு
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற திரைப்படங்களின் பட்டியில் இடம்பெற்றுள்ளது, இயக்குநர் பிரவீன் காந்த்ரேகுலாவின் நகைச்சுவை திரைப்படமான ‘சினிமா பந்தி’ திரைப்படம். ஒரு ஆட்டோ டிரைவர் எப்படி சினிமாகாரன் ஆகிறான் என்ற பயணத்தை மிக சுவாரசியமாக கூறி நம்மை கவர்ந்திழுக்கும் திரைப்படம் தான் சினிமா பந்தி.
‘இந்தப் படத்தின் அனைத்து அம்சங்களும் புதிதானவை, திரைக்கதை எழுதுவது முதல் தயாரிப்பாளரிடம் கதை செல்வது, அதன்பிறகு நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தளங்களை கண்டுபிடிப்பது வரை அனைத்தும் புதுமையாக அமைந்தது.’ என்று சினிமா பந்தி படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் நிடிமோரு கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார்.
உண்மை சம்பவத்தை ஆழமாக வேரூன்றி ஒரு நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியிடப்பது. இது இரண்டு வாரங்களாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. சரியான ஸ்டுடியோ அமைப்பு மற்றும் முகம் தெரிந்த நடிகர்கள் இல்லாமல் இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒரே காரணம் அதன் உண்மையான கதை மற்றும் நடிப்பு என்று தயாரிப்பாளர் ராஜேஷ் நிடிமோரு விளக்கினார்.
ஒவ்வொருவரும் மனதளவில் திரைப்பட இயக்குனர்களே, விரும்பினால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடியும் என்று படக்குழுவினர் நம்மிடம் கூற முயற்சிக்கின்றனர். ‘சிறுவயதில் என் தந்தை எனக்கு ஒரு கேமராவைக் கொடுத்தபோது எனக்கு ஒரு புது உற்சாகம் கிடைத்தது. அதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதுவே இந்தப் படத்தை எடுக்கும் எண்ணத்தை எனக்கு அளித்தது’, என்றார் இயக்குநர் பிரவீன் காந்த்ரேகுலா.
கர்நாடகாவில் உள்ள முல்பாகல் தாலுகா கிராமத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதற்கு விளக்கமளித்த திரைக்கதை எழுத்தாளர் வசந்த் மரிங்காண்டி, இந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வெறும் 20-25 வீடுகளுடன் மிகவும் சுத்தமாக இருந்தது. இது எங்களுக்கு ஒரு படத்தின் செட் போல் இருந்தது. படப்பிடிப்பிற்கு மிகவும் வசதியான சூழல், கதைக்கு ஏற்றதாக இருந்தது, என்று கூறினார்.
கதை சுருக்கம்: வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு ஏழை ஆட்டோ டிரைவர் வீரபாபுக்கு அவனது கிராமத்தில் அவனது ஆட்டோவில் யாரோ விட்டுச் சென்ற விலையுயர்ந்த கேமராவை கிடைக்கிறது. அந்த கிராமத்தின் ஒரே திருமண புகைப்படக் கலைஞரான கணபதி அவனிடம், சூப்பர் ஸ்டார்களின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை உருவாக்கப் பயன்படும் கேமரா இதுதான் என்று கூறுகிறார். இதை கேட்ட வீரபாபு, ‘சூப்பர் ஸ்டார்’ கேமராவை வைத்து பிளாக்பஸ்டர் படத்தை எடுக்க முடிவு செய்கிறான். அதற்கு அந்த புகைப்பட கலைஞர் உதவ முழு கிராமமும் நடிகர்களாக மாறுகின்றனர். இதன் மூலம் ஒரு ஆட்டோக்காரன் சினிமாக்காரன் ஆகும் பயணம் தொடங்குகிறது.
************
GS / SRI / DL
(Release ID: 1879677)
Visitor Counter : 193