அணுசக்தி அமைச்சகம்
தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை (எஸ்எம்ஆர்) மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்
Posted On:
27 NOV 2022 1:46PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு), புவி அறிவியல் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற 300 மெகாவாட் திறன் கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை (எஸ்எம்ஆர்) மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
நிதி ஆயோக் மற்றும் அணுசக்தித் துறை ஏற்பாடு செய்த சிறிய மாடுலர் ரியாக்டர்கள் (எஸ்எம்ஆர்) குறித்த பயிற்சி நிகழ்வில், டாக்டர் ஜிதேந்திர சிங் பேசும் போது, “இந்தியாவில் இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தனியார் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கேற்பை ஆராய வேண்டும் என்றார். எஸ்எம்ஆர் தொழில்நுட்பம் வணிக ரீதியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு இரண்டு முக்கிய காரணிகளாக, தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம் மற்றும் நிதி ஆதாரம் அமைந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், “இந்தப் புதிய நடவடிக்கை, பிரதமர் திரு மோடியின் காலநிலை தொடர்பாக எடுக்கப்படும் திடமான முடிவுகள் மூலம் தூய்மையான ஆற்றல் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது” என்றார்.
நாங்கள் ஏற்கனவே தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை, புதைபடிவமற்ற ஆற்றல் வளங்களின் ஊடுருவல் வாயிலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு அணுசக்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இன்று உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நடவடிக்கைகள் பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்- சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
**************
SM / GS / DL
(Release ID: 1879372)
Visitor Counter : 268