பிரதமர் அலுவலகம்
இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நமது தொழில் சமுதாயத்தினரின் பெரும் வரவேற்பை பெறும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
22 NOV 2022 7:05PM by PIB Chennai
இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பேன்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நமது தொழில் சமுதாயத்தினரின் பெரும் வரவேற்பை பெறும் என்றும், இது இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான விரிவான உத்திப்பூர்வமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பேன்சின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“நன்றி PM @AlboMP! இந்தியா, ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவது எங்களது தொழில் துறையினரின் பெரும் வரவேற்பை பெறுவதுடன், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான விரிவான உத்திப்பூர்வமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.”
***
(Release ID: 1878154)
Sri/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1878173)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam