தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக அமைக்கப்பட்டிருந்த திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கோவாவில் இன்று நவம்பர் 21, 2022 இல் IFFI 2022 இல் தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட கலை/சினிமா மற்றும் அழகியல் தொடர்பான பல்வேறு கூறுகளை காட்சிப்படுத்தும் திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவைத் தொடர்ந்து அமைச்சர் பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த தனித்துவமான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அவர் பார்வையிட்டார்.
நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கலா அகாடமிக்கு அருகில் உள்ள டிபி சாலையில் உள்ள கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சியில் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அளவுகளில் 20 அரங்குகள் இடம்பெறும்.
சோனி, கேனான், ரெட், லைக்கா, அல்டாஸ், டிஜோ, அபுச்சர் லைட்ஸ், ஹன்சா சினி எக்யூப்மென்ட் போன்ற முன்னணி சினிமா உபகரண உற்பத்தியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இக்கண்காட்சியானது சமகால சினிமா தயாரிப்பில் தொழில் வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களை காட்சிப்படுத்தும். கண்காட்சி அரங்கில் கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு அமர்வுகளுக்கான பிரத்யேக இடங்களும் இருக்கும்.
******
PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1877995)
வருகையாளர் எண்ணிக்கை : 228